• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்தில் புதிய உலகம்
  2015-10-26 15:15:26  cri எழுத்தின் அளவு:  A A A   
புதிய உலகம் எனும் இடம், ஷாங்காய் வரலாற்று மற்றும் பண்பாட்டு நறுமணமுடைய நகரச் சுற்றுலா இடமாகும். புதுமை மற்றும் பழமையும், கீழை மற்றும் மேலை நாடுகளின் பண்பாட்டு வளங்களும் இவ்விடத்தில் காணப்படுகின்றன. இங்குள்ள கட்டிடங்கள் முக்கியமாக ஷி கு மென் எனும் ஷாங்காய் பாணியிலும், நவீன பாணியிலும் உள்ளன. இங்குள்ள நடை பயண வீதியில், உணவகங்கள், கடைகள், பொழுதுபோக்கிடங்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. ஷாங்காய் பயணத்தில் இவ்விடம் இன்றியமையாதது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் முதலாவது தேசிய மாநாட்டுக்கான நினைவகம், முன்பு ஷு டே லி என அழைக்கப்பட்டது. அது, ஷி கு மென் எனும் பாணியில் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களாகும். ஷி கு மென் என்பது, கல்லாலான நிலை சட்டமுடைய கதவு என்று பொருள். 1920ஆம் ஆண்டுகளில் ஷாங்காயிலுள்ள பொது மக்களின் வீடுகள் இத்தோற்றத்தில் இருந்தன. புரட்சி வரலாற்றுத் தொல் பொருட்கள் கண்காட்சி, முதலாவது தேசிய மாநாடு நடைபெற்ற இடம் ஆகிய இரண்டு பகுதிகளாக இந்நினைவகம் பிரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் புரட்சி மற்றும் வரலாற்று தரவுகளைப் படிப்பதற்கு வசதியளிக்கும் வகையில், மூன்று துணை காட்சி அறைகளும் நிறுவப்பட்டன. அப்போதைய பிரமுகர்களுடன் தொடர்புடைய பொருட்களைத் தவிர, முதலாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் நிழற்படங்களையும் தத்ரூபமான மெழுகு சிலைகளையும் இங்கு பார்வையிடலாம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040