• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்தில் புதிய உலகம்
  2015-10-26 15:15:26  cri எழுத்தின் அளவு:  A A A   

30 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய ஷாங்காய் புதிய உலகம், ஷி கு மென் பாணி கட்டிடங்களிடையில் வளர்ச்சி அடைந்த நவ நாகரிக இடமாகும். செங்கல், ஓடு, கல்லாலான நிலை சட்டமுடைய கதவு ஆகியவை, 1920ஆம் ஆண்டுகளில் ஷாங்காயின் காதற்காவிய தோற்றத்தை நிலைநிறுத்தி வெளிப்படுத்துகின்றன. வரலாற்று சின்னங்கள் எங்கெங்கும் காணப்படக் கூடிய இந்தக் கட்டிடத்தின் உள்புறத்தில், நவீன கருப்பொருள் கொண்ட உணவகம், ஆடை கடை, மதுவகம், காப்பியகம் முதலியவை அமைந்துள்ளன. புதிய உலகத்தின் சிறப்பு ஈர்ப்பாற்றல், தனி ஒரு இடத்தைச் சார்ந்திருப்பது அல்ல. முழு காட்சித்தலத்திலும் உலா சென்றால், பழம்பெரும் ஷாங்காயின் வரலாற்றுச் சூழலில், நிறைய நவீன நாகரிகத்தின் நறுமணத்தையும் சுவாசிக்கலாம் என்பது, அதன் ஈர்ப்பாற்றலாகும்.

வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்க விரும்பினால், ஷாங்காய் Trio எனும் கடையில் பார்வையிடலாம். ஒளிவீசும் ஆடம்பர வெளித்தோற்றத்துக்குப் பதிலாக, சாதாரண வீடு போன்று இந்த கடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. கையில்லாத மேலாடை, பூத்தையல் கொண்ட போர்வை உள்ளிட்ட வணிகப் பொருட்கள் எளிதான மற்றும் இயல்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரான்சு நாட்டைச் சேர்ந்த இந்தக் கடை உரிமையாளரின் ஷாங்காய் பற்றிய முதலாவது மனப் பதிவை இது வெளிப்படுத்துகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040