• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்தில் புதிய உலகம்
  2015-10-26 15:15:26  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய உலகத்தின் உணவகப் பண்பாடு சிறப்பாக உள்ளது. கீழை ஈர்ப்பாற்றல் மிக்க உணவு மற்றும் பொழுதுபோக்கு மையம், சீனாவின் ஷாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 பிரமுகர்களால் நடத்தப்படுகிறது. இங்குள்ள கருப்பொருள் கொண்ட உணவகத்திலோ, வெளிநாட்டுப் பாணியுடைய உணவகத்திலோ உணவு வகைகளை உண்டு களிக்கும் போது, தலைசிறந்த உணவு பண்பாட்டை உணர்ந்து கொள்ளலாம்.

பச்சை மாணிக்கல் உணவகம், ஷாங்காயில் தலைசிறந்த உணவகங்களில் ஒன்றாகும். அது வழங்கும் குவாங் தோங் பாணி உணவு வகைகள் நன்றாக உள்ளன. இவற்றில், சிற்றுண்டி வகை மிக சிறப்பாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சியுடன், சீனாவின் வேறு இடங்களில் தவிர, சில வெளிநாடுகளிலும் இவ்வுணவகத்தின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்கப்பூரிலுள்ள அதன் கிளை மிகப் பெரிய சீன பாணி உணவகமாகத் திகழ்கிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040