• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்திலுள்ள மத்திய ஹுவா ஹாய் பாதை
  2015-11-04 08:31:30  cri எழுத்தின் அளவு:  A A A   

நான்ஜிங் வீதி போன்று புகழ்பெற்ற ஹுவா ஹாய் பாதை, வணிகச் சின்னம் தவிர, சுவை மற்றும் தனித்த பாணியுடன் கூடிய உள்ளடக்கமும் உடையது. நவீனமயமாக்கப் பாணியுடன், 100 ஆண்டுகால வரலாறுடைய மத்திய ஹுவா ஹாய் பாதை, நவீன நாகரிகமுடைய மிக அழகான பாதையாக மாறியுள்ளது. மொத்தம் 5500 மீட்டர் நீளமான இந்தப் பாதை, லு வான், சூ ஹுய், சாங் நிங் ஆகிய மூன்று பிரதேசங்களைக் கடந்து செல்கிறது. மத்திய ஹுவா ஹாய் பாதையின் கிழக்கு பகுதி, அறிவார்ந்த அழகுடைய உயர் நிலை வணிக அலுவல் மண்டலமாக உள்ளது. அதன் மையப் பகுதி, அடையாள முக்கியத்துவம் வாய்ந்த உயர் தர வர்த்தக மண்டலமாக விளங்குகிறது. அதன் மேற்கு பகுதி, மானிட பண்பாட்டின் நறுமணமுடைய கலை மண்டலமாகத் திகழ்கிறது.

சிறந்த பாணியுடைய எழில்மிக்க மத்திய ஹுவா ஹாய் பாதையில், பண்பாட்டு வளமிக்க காட்சித்தலங்கள் அதிகமாக உள்ளன. பிரமுகர்களின் முந்தைய இல்லங்கள், தோட்டம் சூழ்ந்த நாட்டுப்புற மாளிகைகள் ஆகியவை நேர்த்தியான முறையில் இந்தப் பாதையை அலங்கரிக்கின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040