• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்திலுள்ள மத்திய ஹுவா ஹாய் பாதை
  2015-11-04 08:31:30  cri எழுத்தின் அளவு:  A A A   

மத்திய ஹுவா ஹாய் பாதையின் கிழக்கு பகுதி வழியாக நடந்து சென்றால், யான் டாங் வீதியை அடையலாம். உணவகப் பண்பாடு, பல்வகை மதுவகங்கள், பொழுதுபோக்கிடங்கள் ஆகியவை இந்த வீதியின் தனிச்சிறப்பாகும். வண்ணமிகு கற்களால் உருவாக்கப்பட்ட சாலையில் தெற்கு நோக்கி நடந்து சென்றால், ஐரோப்பிய பாணி நிறைந்த கட்டிடங்களைப் பார்வையிடலாம்.

மத்திய ஹுவா ஹாய் பாதையை குறுக்காக கடந்து செல்லும் மௌ மிங் தெற்கு வீதி, பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் ஒளிமயமானது. தற்போது அமைதியான இந்த வீதியில், சி பௌ உள்ளிட்ட சீனப் பாணி ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் அதிகமாக உள்ளன. மேலும், மதுவகங்கள், காப்பியகங்கள், தனிச்சிறப்புமிக்க சிறிய கடைகள் ஆகியவையும் இங்கே நிறைந்து காணப்படுகின்றன.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040