• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பேச்சுவராத்தை
  2015-11-24 11:24:30  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் நிதி அமைச்சர் எக்லில் அஹமது ஹகிமி, பாகிஸ்தானில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், பாகிஸ்தான் நிதி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இப்பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இப்பேச்சுவார்த்தையில் வரிவிதிப்பு, வர்த்தக வசதிகள், நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி சாலைகளுக்கான திட்டங்கள், பாகிஸ்தானில் மருத்துவம் மற்றும் பொறியியல் பயின்று வரும் ஆப்கன் மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிப்பது, போக்குவரத்து, எரியாற்றல் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040