• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் விவசாயிகளின் ஓவியக் கிராமம்
  2016-01-26 15:27:46  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே, வணக்கம். நான் நிலானி. சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காய் மாநகரின் சுற்றுப்புறத்திலுள்ள காட்சித்தலங்கள் பற்றி உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு ரசிக்க நீங்கள் தயாரா

முதலில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்க்கும் நண்பர்களுக்கு ஷாங்காய் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மண்டலத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இம்மண்டலம் சுங்ஜியாங் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அது ஷாங்காயின் படப்பிடிப்புத் தளமாகவும், தனிச்சிறப்பு மிக்க காட்சித்தலமாகவும் விளங்குகிறது. அங்கு, இரண்டு தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பகங்களும், நான்கு திரைப்பட படப்பிடிப்பகங்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல், ஆலயம், கடந்த நூற்றாண்டின் 30ஆம் ஆண்டுகளிலான நான்ஜிங் சாலை, ஷாங்காய் மாநகரின் பழைய குடியிருப்புப் பிரதேசம், சுச்சோ ஆற்றின் துறைமுகப் பகுதி முதலியவற்றால், இந்த மண்டலம், படப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல், பண்பாட்டைப் பரவல் செய்யும் சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. சீனாவின் படப்பிடிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதா? அவ்வாறாயின் ஷாங்காய் படம் மற்றும் தொலைக்காட்சி மண்டலத்துக்கு வாருங்கள். 18 வயது மேலோருக்கான நுழைவுச்சீட்டு 50யுவானாகும். மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு 25யுவானாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040