• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்களுக்கு வெளிநாட்டு நண்பர்களின் வாழ்த்துக்கள்
  2016-02-07 16:08:11  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் பாரம்பரிய குரங்கு ஆண்டு பிறப்பினை முன்னிட்டு, பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் சீன மக்களுக்கு இனிய வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தான் குரங்கு ஆண்டில் பிறந்த்தாகவும், குரங்கின் விவேகமும் சுறுசுறுப்பும் புதிய ஆண்டின் விருப்பத்தையும் ஆற்றலையும் குறிக்கின்றன என்றும் ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் தனது வாழ்த்துக் காணொலியில் குறிப்பிட்டுள்ளார்.சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா சீன மக்களுக்கு இனிய வசந்த விழா நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரிட்டன் தலைமை அமைச்சர் கேமரூன் தனது தலைமை அமைச்சர் மாளிகையின் இணையத்தளத்தில் உலகில் சீனாவின் வசந்த விழாவைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.மேலும் ஜப்பானின் தலைமை அமைச்சர் சின்சோ அபே, கனேடிய தலைமை அமைச்சர் த்ருடோ, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா, பிரேசில் அரசுத் தலைவர் ருசெப் அம்மையார் ஆகியோரும் சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040