• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேட்டோவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையே இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பு
  2016-02-11 15:51:20  cri எழுத்தின் அளவு:  A A A   

இணையப் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் 10ஆம் நாள் தொழில் நுட்ப உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளன என்று நேட்டோ அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வுடன்படிக்கையின்படி, இரு தரப்புகளின் இணைய அவசர பிரிவுகள், தகவல் பரிமாற்றத்தை வலுபடுத்தி, நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்.

பாரம்பரிய ராணுவ போரையும், இணையத் தாக்குதல் உள்ளிட்ட புதிய அச்சுறுதல்களையும் நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று நேட்டோ தலைமை செயலாளர் ஜேன்ஸ் ஸ்டோல்டேன்பெர்க் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040