• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பு
  2016-03-23 18:53:58  cri எழுத்தின் அளவு:  A A A   

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம் சீனாவின் ஹைநான் மாநிலத்தில் துவங்கியுள்ளது. செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் 22ஆம் நாள் நடைபெற்றது. இதில், போ ஆவ் ஆசிய மன்றம், சீனப் பொது வெளியுறவு சங்கம் ஆகியவையும், சீனா, துருக்கி, கம்போடியா, நேபாளம் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடகங்களும் ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வட்ட மேசைக் கூட்டத்தின் தலைவரும் சீன வானொலி இயக்குநருமான வாங் கேங்நியேன் இக்கூட்டத்தில் கூறியதாவது ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, ஒன்றை ஒன்று நம்புவது ஆகியவை செய்தி ஊடகங்களுக்கிடையில் நட்பார்ந்த முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான முன் நிபந்தனையாகும். கூட்டு வெற்றியை அனுபவிப்பது, ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்வது ஆகியவை நீண்ட கால ஒத்துழைப்புக்கான விடா ஆற்றலாகும். ஒட்டுமொத்தமாக வளர்வது, புகழை உருவாக்குவது ஆகியவை விரிவான ஒத்துழைப்புக்கான இன்றியமையாத வழிமுறையாகும் என்று அவர் கூறினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பு பற்றி துருக்கி யொன் வானொலியின் இயக்குநர் கிலிண்ச்சி கூறியதாவது செய்தி ஊடகங்களுக்கிடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பொறுப்பேற்க வேண்டும். மேலும், பல்வேறு நாடுகளின் உயர் தரமான செய்தி ஊடகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு அமைப்பாகவும், செய்தி ஊடகங்களைக் கண்காணிக்கும் உயர் நிலை அமைப்பாகவும் இது அமைக்கப்பட வேண்டும். பெருமளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு, செய்தி ஊடகங்களின் வளர்ச்சிப்போக்கை பகுத்தாராய்ந்து பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்களுக்கு வளர்ச்சி திசையை சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சீனப் பொது வெளியுறவு சங்கத்தின் தலைவரும் சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான லீ சாவ்சிங் கூறுகையில், ஆசியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 60 விழுக்காடு வகிக்கின்றது. ஆனால், ஆசிய மக்களுருக்குக் கிடைக்கும் செய்திகளில் மூன்றில் இரண்டு பகுதி வளர்ந்த நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்றன. ஆசியாவின் செய்திகள் பல ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளில் திருத்தப்பட்டு உண்மைக்கு மாறான செய்திகளாக வெளியிடப்படுகின்றன. ஆகவே, ஆசிய செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது நடைமுறை மற்றும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040