• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வுஹோஸி கோயில்
  2016-04-08 15:00:37  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்று, செங்டு நகரின் வுஹோஸி கோயிலை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இக்கோயில் செங்டு நகரின் வுஹோ பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது ஒரு லட்சத்து 50ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடையது. சீனாவில் மன்னர் மற்றும் அதிகாரி கூட்டாக வழிபாடு செய்யும் ஒரே ஒரு நினைவுக் கோயில் அதுவாகும். ஷுகேலியாங் சீன வரலாற்றில் மூன்று நாட்டு காலத்தில் நாட்டின் தலைமை அமைச்சராவார். அரசியலில் மட்டுமல்ல ராணுவம், இலக்கியம், கையெழுத்து மற்றும் படைப்புகளிலும் அவர் நன்கு தேர்ச்சி பெற்றவர். சீனாவில் ஷுகேலியாங் பற்றி அறியாதவர் எவரும் இல்லை. அவர் பற்றி நிறைய கதைகள் இன்றும் கூட மக்களால் வாய்மொழியாகக் கூறப்பட்டு வருகின்றன. சீனாவில் என்ற பழமொழி ஷுகேலியாங் பற்றியது தான். இப்பழமொழி பற்றி விளக்கிக் கூறுகிறேன்.

இந்தப் பதற்றமான மூன்று நாட்டுக் காலத்தில், ஷூ நாட்டின் மன்னர் லியூபை போரில் தோல்வியைச் சந்தித்தார். ஷுகேலியாங் என்பவரின் உதவி கிடைத்தால், நீங்கள் உலகத்தை வெல்லலாம் என்று அவரின் ஆலோசகர் ஒருவர் கூறினார். அதனாலே, மறுநாளில், ஷுகேலியாங் சந்தித்துரையாட, திட்டமிட்டார். அதனால், அவருக்குப் பரிசுப் பொருட்களை ஆயத்தம் செய்தார். ஆனால், அன்று ஷுகேலியாங் வெளியே பயணம் மேற்கொண்டார். எப்போது திரும்புவார் என்று அவரது சேவையாளருக்குத் தெரியில்லை. சில நாட்களுக்குப் பிறகு, கடும் பனியைப் பொருட்படுத்தாமல், மன்னர் லியூபை, ஷுகேலியாங் சந்திக்க, மறுபடியும் வந்தார். ஷுகேலியாங் ஒரு நண்பரின் அழைப்பை ஏற்று வெளியே போனார் என்று கூறப்பட்டது. இதனால், ஏமாற்றமடைந்த லியூபை அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். ஷுகேலியாங்கின் உதவியைக் கிடைத்தால், உலகத்தை அமைதியாக ஆட்சி புரிய முடியும் என்று மன்னர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040