• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார நிலைமை பற்றிய கூட்டம்
  2016-04-30 14:52:15  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு 29ஆம் நாள் கூட்டத்தை நடத்தி, தற்போதைய பொருளாதார நிலைமையையும் பொருளாதாரப் பணியையும் பற்றி ஆய்வு செய்துள்ளது.
இவ்வாண்டில், சிக்கலான உள் நாட்டு வெளிநாட்டு சூழலில், பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு வாரியங்களிலும் பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு உருவாக்கம், மக்கள் வாழ்க்கை மேம்பாடு ஆகியவை நனவாக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு முதல் 3 திங்களில், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, நகரங்களில் புதிதாக வேலை வாய்ப்பு, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் வருமானம் அதிகரிப்பு ஆகிய முக்கிய குறிக்கோள்களை வரையறையை எட்டியது. பொருளாதாரச் செயல்பாட்டில் நியாயமான அளவில் நிலைநிறுத்தியது. பல்வேறு சமூக லட்சிய வளர்ச்சி புதிய சாதனையைப் பெற்றுள்ளது என்று இக்கூட்டத்தில் கருதப்படுகின்றது.
ஆனால், தற்போது, பொருளாதாரம் பெரும் நிர்பந்தத்தைப் பெற்று வருகின்றது. உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடு இன்னல் மிக்க நிலைமையை எதிர்நோக்குகின்றது. சந்தை இடர்ப்பாடு தொடர்ந்து அதிகரிக்கின்றது. அத்துடன், ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தியது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040