• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேர மாற்றத்தின் மூலம் மின் பற்றாக்குறையை சரிசெய்யும் வெனிசூலா
  2016-05-02 16:17:23  cri எழுத்தின் அளவு:  A A A   
இயற்கை ஒளியை போதியளவில் பயன்படுத்தி, மின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், மே முதல் நாள் தொடங்கி, வெனிசூலா முழு நாட்டின் நேரத்தை அரை மணி நேரமாக முன்னோக்கி அமைத்துள்ளது.

மணியை சரிப்படுத்திய பிறகு, அந்நாட்டின் வரையறை நேரம், கிரீன்விச் நாண்மீன் நேரத்தை விட, 4 மணி நேரம் தாமதமாக உள்ளது.

வெனிசூலா, முக்கியமாக நீராற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கிறது. ஆனால், எல்நீனோ காலநிலையின் பாதிப்பில், அந்நாட்டில் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார வினியோகத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040