• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானின் ஏற்றுமதி இலக்கு
  2016-05-03 11:06:01  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் வணிக அமைச்சகம் உருவாக்கிய 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான வர்த்தக கொள்கைக்கான கட்டுக்கோப்பு ஆவணம் அண்மையில் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானின் ஓராண்டுக்கான ஏற்றுமதித் தொகை 3500 கோடி அமெரிக்க டாலரைத் தாண்ட வேண்டும் என்ற இலக்கு இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில், வரி இல்லா ஏற்றுமதி, உற்பத்தி பொருட்களின் தர உயர்வு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

சீன-பாகிஸ்தான் பொருளாதார வர்த்தக மண்டலம், பாகிஸ்தானின் வர்த்தக போக்குவரத்து வசதியை மேம்படுத்தியுள்ளது. அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத் திறனை பாகிஸ்தான் வளர்ப்பதற்கு இது துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040