• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
AIIB வங்கிக்கும்  ADB வங்கிக்கும் இடையே ஒத்துழைப்பு
  2016-05-03 14:31:57  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கிக்கும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே ஒத்துழைப்புறவை வலுப்படுத்தும் வகையில், இவ்விரு வங்கிகளின் தலைவர்கள் 2ஆம் நாள் ஜெர்மனியின் ஃப்ராங்ஃப்ரட் நகரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 49ஆவது ஆண்டு கூட்டத்தின் போது, புரிந்துணர்வு குறிப்பாணையில் கையெழுத்திட்டனர். ஒத்துழைப்புக்கான நிதித் திரட்டும் திட்டப்பணிகள் இவ்விரு வங்கிகளின் ஒத்துழைப்பு அம்சங்களில் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இருதரப்பும் குறிப்பிட்ட நேரத்தில் உயர் நிலை கலந்தாலோசனையை நடத்தும் என்று தெரிகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040