• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யுனானில் சீன-இந்திய யோகா மாநாடு
  2016-05-06 10:37:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாநிலத்தில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த யோகா நிபுணர்கள் பங்கேற்கும் மாநாடு இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.

குன்மிங் நகர அரசு தெரிவித்துள்ள தகவலின்படி, இம்மாடு வரும் 18-ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும். இதில் நடைபெறும் யோகா பயிற்சி வகுப்பில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

சமீப காலமாக சீனாவில் யோகா மிகவும் பிரபலமடைந்துள்ளது. யுனான் மின்ஸு பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் சீனா- இந்தியா யோகா கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் தற்போதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இலவசமாக யோகாவை கற்று பயன்பெற்றுள்ளனர்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040