• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுகாதார இலக்கின் நடைமுறையாக்கத்துக்கு சீனாவின் முயற்சி
  2016-05-24 11:28:44  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடரவல்ல வளர்ச்சிக்கான ஐ.நாவின் 2030 நிகழ்ச்சி நிரலில் சுகாதாரம் தொடர்பான இலக்கின் நடைமுறையாக்கத்தை உலக சுகாதார அமைப்பு  முன்னேற்றுவதற்கு சீன அரசு ஆதரவளிக்கும் அதேவேளை, அதற்கு ஆக்கப்பூர்வ பங்கினை ஆற்றவும் விரும்புகிறது என்று சீனத் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல திட்ட ஆணையத்தின் தலைவர் லீ பின் அம்மையார் தெரிவித்தார். 23ஆம் நாள் துவங்கிய 69ஆவது உலக சுகாதார மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

இம்மாநாட்டின் பொது விவாதத்தில் அவர் பேசுகையில், சீனா தனது பொறுப்பை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றி, தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கி, இந்த இலக்கின் நனவாக்கத்துக்குப் பங்காற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040