• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீர் சுத்திகரிப்பு மற்றும் தொற்று நோய் தடுப்புக்காக இலங்கைக்கு ஐ.நா. உதவி
  2016-05-24 18:06:56  cri எழுத்தின் அளவு:  A A A   

இலங்கையில் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணறுகள் மற்றும் வீடுகள் உள்ள அசுத்தமான நீரை சுத்தப்படுத்துவதற்கு உதவும் வகையில், இலங்கை அரசுக்கு நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், குளோரின் ஆகிய உதவிப் பொருட்களை வழங்கியுள்ளதாக, ஐ.நா. 23ஆம் நாள் அறிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள நகரப்புறங்களில் நீர் மற்றும் சுகாதார வசதிகள் அளவுக்கு மீறிய நிலையில் பயன்படுத்தப்படுகிறது. பல பகுதிகளில் கிணறுகள் மற்றும் குடிநீர் வளங்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இலங்கை மக்களுக்கு தூய்மையான பாதுகாப்பான நீர் வளம் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் வழங்குவது அவசியம் என்று மனித நேய விவகாரத்தின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

தற்போது வரை, இலங்கையில் கடும் காற்று மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 92 பேர் உயிரிழந்தனர். 130க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மேலும், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் 5லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040