• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா:பன்னாடுகள் சீன நாட்டின் அனுபவத்தை கற்க வேண்டும்
  2016-05-31 09:03:46  cri எழுத்தின் அளவு:  A A A   
2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் தொடர்பான ஐ.நா தலைமைச் செயலாளரின் சிறப்பு ஆலோசகர் டேவிட் நபரோ 30ஆம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள நிங்ச்சி நகரில் பேசுகையில், மேலதிக நாடுகள் சீன நாட்டின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, மேலும் விரைவான வளர்ச்சியை நனவாக்கிட எதிர்பார்ப்பதாக கூறினார்.

தெற்கு-தெற்கு ஒத்துழைப்பில் சீனா தலைமைப் பங்கு ஆற்றியுள்ளது. அதோடு, சீனா, தன்னலமற்ற முறையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல துறைகளில் சீனா ஆக்கப்பூர்வ பங்கு ஆற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், உலகின் எதிர்காலத்துடன் தொடர்புடைய நடவடிக்கையில், சீன அரசு மற்றும் மக்களின் பங்களிப்பு இல்லாமல், இது நனவாக்கப்பட முடியாது. சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமாக இருப்பது மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியிலும் வறுமை ஒழிப்புத் துறையிலும் சீனா மாபெரும் சாதனைகளையும் பெற்றுள்ளது. இவை எல்லாம் காரணங்களாகும் என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040