• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டெடி கரடி அருங்காட்சியகம்
  2016-06-17 09:51:47  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சியின் துவக்கத்தில், வேடிக்கையான டெடி கரடி அருங்காட்சியகம் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். குழந்தை மட்டுமல்ல, வயது வந்தவர்களுக்கும் குழந்தைதனத்தைத் திருப்பிக் கொடுக்கும் இந்த அருங்காட்சியகம் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?அவ்வாறெனில், என்னுடன் செங்டு நகரிலுள்ள டெடி கரடி அருங்காட்சியகத்தை வலம் வருவோமா ?

இந்த அருங்காட்சியகம் செங்டு நகரின் வேன்ஜியாங் வட்டத்தில் அமைந்துள்ளது. சீனா மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து கட்டியமைக்கப்பட்டது. தற்போது, உலகின் மிகப் பெரிய டெடி கரடி அருங்காட்சியமாக இது திகழ்கிறது. 2012ஆம் ஆண்டு பயணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மூன்றடுக்கு கட்டிடத்தில் இந்த அருங்காட்சியம் பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறது. அதன் நிலப்பரப்பு சுமார் பத்தாயிரம் சதுர மீட்டராகும். இந்த டெடிக் கரடி அருங்காட்சியகத்துக்கும் பாரம்பரிய அருங்காட்சியகத்துக்குமிடையே வேறுபாடு உள்ளது. அங்கு, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் டெடி கரடிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நூற்றுக்கு அதிகமான ஆண்டுகளில் பரவலாகிய டெடி பண்பாட்டை அங்கு அறிந்து கொள்ளலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040