• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவியல் ஆய்வுத் துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிதி ஒதுக்கீடு
  2016-06-23 15:23:44  cri எழுத்தின் அளவு:  A A A   

அறிவியல் ஆய்வுத் துறையில் சீனா நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆய்வுத் திறன் தெளிவாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பிரிட்டனின் நேச்சர் இதழ் தனது இணையதளத்தில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதாரம் அதிகரிக்கும் வேகம் குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளது. ஆனால், அறிவியல் துறையில் ஒதுக்கீட்டை சீனா குறைக்கவில்லை என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

2005 முதல் 2015 வரையான பத்து ஆண்டுகளில், சீனா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, உலக நாடுகளின் மொத்த எண்ணிக்கையில் 13 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காட்டாக உயர்ந்துள்ளது. இந்த விகிதத்தில், அமெரிக்காவை அடுத்து, சீனா 2-வது இடத்தில் உள்ளது என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040