• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் வாக்கெடுப்பின் முடிவு வெளியிடப்பட்டது
  2016-06-24 17:08:09  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரிப்பதாக பிரிட்டன் தேர்தல் ஆணையத்தின் முதன்மை வாக்கு பதிவு அலுவலர் ஜேன்னீ வோர்சன் உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் முற்பகல் மான்செஸ்டர் நகராட்சி அலுவலக மண்டபத்தில் அறிவித்தார்.

அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பொது வாக்கெடுப்பின் முடிவின்படி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஆதரிக்கும் விகிதம் 52 விழுக்காடும், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை ஆதரிக்கும் விகிதம் 48 விழுக்காடும் ஆக பொது மக்கள் வாக்களித்துள்ளனர்.

தலைமையமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் காமேருன் 24ஆம் நாள் முற்பகல் உரை நிகழ்த்திய போது அறிவித்தார்.

பொது வாக்கெடுப்பு முடிவு வெளியிடப்பட்ட பின் அமெரிக்க டாலருக்கான பிரிட்டிஷ் பவுண்ட் மாற்று விகிதம் பெருமளவில் குறைந்து, 1985ஆம் ஆண்டுக்கு பிந்தைய மிக தாழ்ந்த நிலையை எட்டியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040