• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரானில் அழிக்கப்பட்ட அரசு எதிர்ப்புக் குழு
  2016-06-26 18:31:12  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரானின் வட மேற்கு பகுதியில் மறைந்திருந்த அரசுக்கு எதிரான ஆயுதக்குழு ஒன்று 24ஆம் நாள் அழித்தொழிக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் இஸ்லாமிக் புரட்சியான பாதுகாவலர் படை 25ஆம் நாள் கூறியது.

ஈரானின் குர்திஷ் பிரிவினைவாதிகள் உருவாக்கிய இந்த ஆயுதக்குழு துருக்கியின் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் கிளையாகும் என்று பாதுகாவலர் படையின் இணையதளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஜுன் திங்கள் நடுப்பகுதியிலிருந்து, ஈரான் இராணுவம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் வட மேற்கில் மறைந்திருந்த அரசுக்கு எதிரான பல ஆயுதக்குழுக்களை ஒழித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040