• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லாங்மார்ச் 7 ஏவூர்த்தியின் வெற்றிகரமான பறத்தல்
  2016-06-26 18:47:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சரக்கு விண்கலனைச் செலுத்தும் வகையில் சீனா புதிதாக ஆராய்ந்து தயாரித்த லாங்மார்ச் 7 ஏவூர்த்தி, ஜுன் 25ஆம் நாளிரவு 8 மணிக்கு, ஹாய்னான் மாநிலத்தின் வென்சாங் விண்வெளி மையத்திலிருந்து செலுத்தப்பட்டது. சுமார் 603 வினாடிகளுக்குப் பின், எடையை ஏற்றிச்செல்லும் பகுதி ஏவூர்த்தியிலிருந்து வெற்றிகரமாக பிரிந்து, திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது. லாங்மார்ச் 7 ஏவூர்த்தியின் முதன்முறை ஏவுதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஏவூர்த்தியில், புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாசற்ற, நச்சு இல்லா புதிய தலைமுறை ஏவூர்த்தியாகும். சீன விண்கலத்தின் விண்வெளி பயணத் திறனை இது பயனுள்ள முறையில் உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040