• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அருவியின் உலகமான ஜியுசைகோ காட்சித்தலம்
  2016-06-28 09:20:37  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சியில் சீனாவில் மட்டுமல்ல, உலகளவிலும் புகழ் பெற்ற இயற்கைக் காட்சித்தலம் ஜியுசைகோ காட்சித்தலம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜியுசைகோ காட்சித்தலம் ஸிச்சுவான் மாநிலத்தின் அபா எனும் ஜியாங் இனத் தன்னாட்சி சோவில் அமைந்துள்ளது.

சீனாவில் முதலாவது இயற்கைக் காட்சிப் பாதுகாப்பிடம் இதுவுமாகும். செங்டு நகரிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு மலைப் பள்ளத்தில் ஜியுசைகோ காட்சித்தலம் அமைந்துள்ளது. அதன் நீளம் சுமார் 50 கிலோமீட்டராகும். 64297 ஹெக்டர் நிலப்பரப்புடையது. காடுகளின் பரவல் விகிதம் 80விழுக்காட்டுக்கும் மேலாகும். காட்சித்தலத்தில் ஒன்பது திபெத் இன கிராமங்கள் உள்ளதால், ஒன்பது கிராமங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜியு என்றால், சீன மொழியில் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040