• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
 சீனாவின் பாதுகாப்புக் கொள்கை அறிமுகம் பற்றிய செய்தியாளர் கூட்டம்
  2016-07-08 16:30:23  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் பாதுகாப்புக் கொள்கை பற்றி சீன பாதுகாப்பமைச்சகம் 7ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் தென் சீனக் கடல் பற்றி அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. தென் சீனக் கடற்பரப்பில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு சீனா பொறுப்பு ஏற்காது. இப்பிரதேசத்தில் சீனா எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நேர்மையானது சட்டத்துக்கு ஏற்றது என்று சீனப் பாதுகாப்பமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யூசுன் கூறினார். இந்நிலையில் எந்த ஒரு வெளிநாடும் அமைதி என்ற பெயரில் ஆத்திரமூட்டம் செயலைப் புரிந்தால், சீனா அதனைச் சமாளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உரிமை பிரதேசத்தையும் நேர்மையான கடல் உரிமை மற்றும் நலன்களையும் சீனா உறுதியாகப் பேணிக்காக்கும். தொடர்புடைய நாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, வரலாற்று உண்மைகளுக்கு மதிப்பளிக்கும் அடிப்படையில், சர்வதேசச் சட்டத்துக்கிணங்க பேச்சுவார்த்தை மூலம் அமைதி முறையில் சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என்பதில் சீனா ஊன்றி நிற்கும். அதேவேளையில், நாட்டின் இறையாண்மையையும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும் பேணிக்காக்கம் ராணுவம் மனவுறுதியையும் நம்பிக்கையையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சர்வதேச பாதுகாப்பு என்ற பெயரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகின்றன. யாங் யூசுன் இதனை வன்மையாகக் கண்டித்தார். பிற நாடுகள் உள் நோக்கத்துடன் மேற்கொண்டு வரும் இத்தகைய செயல்கள் பிரதேசத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக அமெரிக்கா இக்கடற்பரப்பில் போர் கப்பல்களை நிறுத்தி வருவது, ஒரு வகை ஆத்திரமூட்டல் செயலாகும் என்று அவர் கூறினார். இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தினால்தான், இந்த விவகாரத்தை அமைதியாக தீர்க்க முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தென் சீனக் கடற்பரப்பில் சீனக் கடற்படை மேற்கொள்ளும் இராணுவப் பயற்சி பற்றி கூறுகையில், ஒருபுறம் அமைதியான முறையில் சர்ச்சையைத் தீர்ப்பதில் சீனா ஊன்றி நிற்கும். மறுபுறம், அச்சுறுத்தலைச் சமாளிக்க சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040