• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் விண்வெளி ஆய்வகத்தின் விண்வெளிப் பயணத் திட்டம்
  2016-07-10 17:05:26  cri எழுத்தின் அளவு:  A A A   

தியென்குங்-2 எனும் விண்வெளி ஆய்வகம் தொடர்பான அனைத்து ஆய்வு மற்றும் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்றும், இவ்வாண்டின் ஜுலை 7-ஆம் நாள் இது பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, 9-ஆம் நாள் ஜியோ ட்சுவன் செயற்கைக்கோள் ஏவு மையத்தைச் சென்றடைந்து, பொருத்துதல் மற்றும் பரிசோதனை பணி துவங்கியது என்றும் சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயண அலுவலகம் கூறியுள்ளது.

திட்டப்படி, தியென்குங்-2 எனும் விண்வெளி ஆய்வகம் வரும் செப்டம்பர் திங்கள் நடுப்பகுதியில் செலுத்தப்படும். அதற்குப் பின், செந்சொ-11 எனும் விண்கலத்தின் பயணத்தை வரவேற்கும் வகையில், தனது சுற்று வட்டப் பாதையில் பரிசோதனை மேற்கொள்வதோடு, தியென்குங்-2 எனும் விண்வெளி ஆய்வகம் தற்சார்பாக இயங்கத் தொடங்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040