• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடற்பரப்பில் கலங்கரை விளக்குகளின் கட்டுமானம் மற்றும் பயன்பாடு
  2016-07-11 15:19:11  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் சீனக் கடற்பரப்பிலுள்ள நான்ஷா தீவுகளில், 5 பெரிய கலங்கரை விளக்குகளை சீனா கட்டியமைத்து வருகிறது. தற்போது வரை, அவற்றில் 4 விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

கலங்கரை விளக்குகளின் கட்டுமானம் மற்றும் பயன்பாடு குறித்து சீன போக்குவரத்துத் துறையின் கடல் விவகாரப் பிரிவுத் தலைவர் சு ரூச்சிங் 10ஆம் நாள் சீன கடற்பயண தினம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தென் சீனக் கடலில் பொது நலன்கள் தரும் முக்கிய சேவை வசதிகள், இந்த 5 கலங்கரை விளக்குகள் ஆகும். அவற்றின் கட்டுமானம் மற்றும் பயன்பாடானது, சீனா சர்வதேச பொறுப்பையும் கட்டாய கடமையையும் நிறைவேற்றுவதில் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது

சர்வதேச போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பை உறுதிச் செய்வது, கடலில் தேடுதல், மீட்புதவி, பேரிடர் நீக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படை வசதி ஆதரவு அளிப்பது, கடல் உயிரின வாழ்க்கைச் சூழலை பேணிக்காப்பது முதலிய துறைகளில், கலங்கரை விளக்குகள் அதிக பங்களிப்பை ஆற்றும் என்று தெரிவித்தார்.

தென் சீனக் கடலின் பயணச் சுற்றுச்சூழலை நிலைநிறுத்தும் வகையிலும், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் சுதந்திரத்தை பேணிக்காக்கும் வகையிலும், இக்கடற்பரப்பில் ரோந்து பணிகளை, சீனா கடந்த சில ஆண்டுகளாக ஏற்பாடு செய்து ஈடுபட்டுள்ளது. அதன் மூலம், தென் சீனக் கடலின் நீரியல், வானிலை, பயணச் சுற்றுச்சூழல், கப்பல்களின் போக்குவரத்து மற்றும் வேலை, கடற்பரப்பின் மாசுபாடு உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட அளவில் அறிந்து கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளையில், கடலில் கப்பல்களின் போக்குவரத்து, நிறுத்தம், வேலை ஆகிய பணிகளில் சட்டத்தை மீறும் பல்வகை செயல்பாடுகள் தடுக்கப்பட்டு சரிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கடல் பயணப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கடலுக்கு எதிரான கப்பல்களின் மாசுபாடுகளை தடுப்பதிலும், பயன்மிக்கது.

கடலில் உயிர் மீட்புத் திறனை உயர்த்துவதற்காக சீனா நீண்டகாலமாக முயற்சி எடுத்து வருகிறது. 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை, தென் சீனக் கடலில், விபத்துக்குள்ளான கப்பல்களில் இருந்து சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 3,396 பேரை சீனா வெற்றிகரமாக மீட்டுள்ளது.

மேற்கூறிய பணிகளை தவிரவும், சர்வதசே சட்ட ஒப்பந்தத்தைப் பின்பற்றி, பல்வகை துறைகளில் பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என சீனா முனைப்புடன் முன்மொழிந்துள்ளது. அதில், தென் சீனக் கடற்பரப்பில் உள்ள அண்டை நாடுகளும், போக்குவரத்து பாதுகாப்பு, கடல் காப்பு, கடல் பயண ஆதரவு முதலான துறைகளில் தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, கடல் அவசர நிலைக்கான கூட்டு முன்னெச்சரிக்கை மற்றும் சமாளிப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று சீனா ஆலோசித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040