• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தேசிய பொருளாதாரத்தின் செயல்பாட்டு நிலைமை மீதான மதிப்பீடு
  2016-07-14 16:08:14  cri எழுத்தின் அளவு:  A A A   
2016-ஆம் ஆண்டின் முற்பாதி சீனத் தேசியப் பொருளாதாரத்தின் செயல்பாட்டு நிலைமை தொடர்பான அறிக்கை ஜுலை 15-ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது. இக்காலத்தில், கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 6.7விழுக்காட்டு அளவில் எட்டும், இவ்வாண்டின் முதல் காலாண்டில் இருந்த அளவுக்குச் சமமாகும் என்று சீனாவின் சில புகழ்பெற்ற பொருளியலாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
இவ்வாண்டின் முதல் 5 திங்களில், நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.6விழுக்காடு அதிகரிததுள்ளது. மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 7.3விழுக்காடு குறைந்ததுள்ளது. நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை சீராக அதிகரித்து வருகின்றது.
மேலும், இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேலான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 5.8விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டின் 2வது காலாண்டில், தொழிற்துறை மேலும் நல்ல சாதனையைப் பெறும். இது, இவ்வாண்டின் முற்பாதியில் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றும் என்று பல பொருளியலாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையில், தற்போது சீனப் பொருளாதாரத்தின் செயல்பாட்டில், பல இடர்பாடுகள் உள்ளன.
வெளிப்புற சூழல் காரணிகளாக கூறினால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக அறிவித்தது, சீனாவின் ஏற்றுமதிக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து, சீனப் போக்குவரத்து வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லியன் பிங் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
(ஒலி)
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததால், சில உறுதியற்ற காரணிகள் ஏற்ப்பட்டன. எதிர்காலத்தில், சீனாவின் ஏற்றமதி சந்தைக்கான தேவை அதிகரிப்பை இது பாதிக்கும். இதனால், இவ்வாண்டின் பிற்பாதியில், சீனாவின் ஏற்றுமதி நிலைமை, முந்தைய மதிப்பீட்டை விட தாழ்ந்ததாக இருக்கும் என்றார்.
உள்புற சூழல் காரணிகளாக கூறினால், இவ்வாண்டில், அரசு சாரா முதலீட்டுத் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றது. இதனால், அளவுக்கு மீறிய உற்பத்தி ஆற்றலைக் குறைப்பது உள்ளிட்ட விநியோக சீர்திருத்த நடவடிக்கைகள் மேலும் முன்னேற்றப்பட வேண்டும் என்று சீனத் தேசிய தகவல் மையத்தைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டுப் பிரவின் தலைமைப் பொருளியலாளர் ட்சு பெளவ் லியாங் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040