• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புனிதப் பயணிகளின் பங்கு பற்றி ஈரானின் கருத்து
  2016-07-25 09:29:19  cri எழுத்தின் அளவு:  A A A   
முஸ்லிம் நாடுகளின் புனிதப் பயணிகள் எண்ணிக்கைக்கான ஒதுக்கீடு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினால் உறுதி செய்யப்பட்டு வருகிறது. புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஈரான் மக்கள் எண்ணிக்கைக்கான பங்கினை இதர நாடுகளுக்கு வழங்க சௌதி அரேபியாவுக்கு உரிமை இல்லை என்று ஈரானின் புனிதப் பயண அமைப்பின் பொறுப்பாளர் சையத் ஒஹாடி 24ஆம் நாள் தெரிவித்ததாக அந்நாட்டின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டது.

ஈரானின் புனிதப் பயணிகள் எண்ணிக்கைக்கான ஒதுக்கீடு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ஒஹாடி இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஆனால், இது தொடர்பான தகவலை பாகிஸ்தானின் மத விவகாரத் துறை அமைச்சர் முகமது யூசஃப் உறுதியாக மறுத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040