• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரபு லீக்கி உச்சி மாநாடு நிறைவு
  2016-07-26 11:30:33  cri எழுத்தின் அளவு:  A A A   
27ஆவது அரபு லீக்கின் உச்சி மாநாடு 25ஆம் தேதி இரவு மாவ்லிதானியாவின் தலைநகர் நுவாக்ட்சொட்டில் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அரபு நாடுகள் பிரதேச பாதுகாப்பு மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பது தெளிவுபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அரபு நாடுகளின் கூட்டணிப் படை உருவாக்கம், பாலஸ்தீனப் பிரச்சினை, சிரியா நிலைமை, லிபியா நிலைமை உள்ளிட்டவை இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அரபு லீக்கின் தலைமைச் செயலாளர் கெய்த் பேசுகையில், அரபு நாடுகளின் கூட்டணிப் படையின் உருவாக்கத்தை முன்னேற்றும் வகையில் அரபு லீக் தொடர்ந்து ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040