• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பயணத்தை முடித்து விட்ட சூரிய சக்தி விமானம்
  2016-07-26 16:44:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சோலார் இம்பல்ஸ்-இரண்டு எனப்படும் விமானம் ஜுலை 26ஆம் நாள் அதிகாலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய உலகின் மிக பெரிய விமானம், உலகம் முழுவதும் சுற்றி வரும் பயணத்தை வெற்றிகமாக நிறைவேற்றியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் திங்கள் தொடங்கி இதுவரை, சோலார் இம்பல்ஸ் விமானம், 35ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை நிறைவேற்றியுள்ளது. உலக பயணத்தில், இந்தியா, மியன்மார், சீனா, ஜப்பான், அமெரிக்கா, எகிப்து முதலான நாடுகளின் 16 நகரங்களின் வழியாக சென்றுள்ளது. எந்த எரிப் பொருளும் செலவின்றி முற்றிலும் சூரிய சக்தி மூலம் இந்த விமானம் இயங்கும். விமானங்கள் பறக்கும் வரலாற்றில் இப்பயணமானது பல புதிய உலக பதிவுகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040