• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் சீனப் பிரதிநிதிக் குழுவின் முதல் தங்கப்பதக்கம்
  2016-08-08 15:32:47  cri எழுத்தின் அளவு:  A A A   

7ஆம் நாள் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளாகும். அன்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எனும் துப்பாக்கி சுடும் போட்டியில், சீனாவின் வீராங்கனை ச்சாங் மங் சியு தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

சீனப் பிரதிநிதிக்குழு பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். ஒலி லியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அரங்கில், சீனக் குடியரசு நாட்டுப்பண் முதன்முறையாக பாடப்பட்டது. நாட்டுப்பண்ணுடன், சீனாவின் ஷான் தூங் மாநிலத்தைச் சேர்ந்த 25வயது ச்சாங் மங் சியு, மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். பின், செய்தியாளரின் பேட்டி அளித்த ச்சாங் மங் சியு, முதன்முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டில் பங்கெடுத்த போதிலும், தன்னுடைய மனத்தில் மன அழுத்தம் எதையும் உணரவில்லை என்றும், இந்த போட்டியை பயிற்சியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், உறுதியற்ற காரணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், போட்டியின்போது, விளையாட்டு அரங்கில், இசை ஒலிப்பரப்பப்படுதல், பார்வையாளர் முழக்கமிட்டு உற்சாகப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டுப்போட்டியின் சூழல் முன்பை விட அதிக இரைச்சல் உடையதாக உள்ளது. இது, விளையாட்டு வீரர்களின் பதட்ட உணர்வை அதிகரிக்கும்.

இந்த நிலைமையில், 16-ஆவது "ஷாட்' வரை பின்தங்கியிருந்த ச்சாங் மங் சியு, தனது 17-ஆவது "ஷாட்'டில் இரு புள்ளிகளைப் பெற்று சரிவிலிருந்து மீண்டார். இறுதிச்சுற்றில் ச்சாங் மங் சியு 199.4 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.

தவிர, சீனாவுக்கான முதலாவது தங்கப் பதக்கத்தைத் தான் பெற்றது குறித்து, ச்சாங் மங் சியு மிகுந்த மிகழ்ச்சி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தப் போட்டியில் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இது, அடுத்தடுத்த போட்டிகளில் பங்கெடுக்க உதவும் என்றார். இதனிடையில், ஆகஸ்ட் 7ஆம் நாள், ச்சாங் மங் சியு தாயாரின் பிறந்த நாளாகும். இந்த தங்கப் பதக்கத்தை தனது தாயாரின் பிறந்த நாள் பரிசாகக் கொண்டாடுவதாக ச்சாங் மங் சியு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040