• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹை லோ கௌ காட்சித்தலம்
  2016-08-10 10:39:08  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்று,  ஹை லோ கௌ எனும் காட்சித்தலம் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். இக்காட்சித்தலம் ஸிச்சுவான் மாநிலத்தின் லூ திங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் மேற்கில் கூங் கா எனும் பனி மலை உள்ளது.

ஹை லோ கோ எனும் காட்சித்தலத்துக்கு ஐந்து சிறப்புகள் உள்ளன. முதலாவது, சூரியன் உதயம். மலையடியில் அமைந்த இக்காட்சித்தலத்தின் அருகிலே, கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டருக்கு உயரமான 45 மலைகள் வானத்தைத் தொடும் விதம் கம்பீரமாக நிற்கின்றன. இம்மலையை பனி பெரிய வெள்ளை போர்வை போல மலையை அலங்கரித்துள்ளது. அதனாலே, மேகமில்லாத நாட்களில், சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது, தங்க ஒளி வீசி பனி மலைகளைத் தங்கமாக்கும்.

இரண்டாவது, பனியாறு. உலகிலுள்ள பெரும்பாலான பனியாறுகள் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் தான் அமைந்துள்ளன. ஆனால், இங்கு கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்திலும், பனியாற்றைக் கண்டுரசிக்கலாம். குறிப்பாக, ஹை லோ கோ காட்சித்தலத்தில் மிகப் பெரிய பனியாறு ஒன்று உள்ளது. அதன் உயரமும் அகலமும் 1000 மீட்டருக்கும் அதிகமானவை. இப்பனியாறு, உயரத்திலிருந்து கீழ் நோக்கி பாய்தோடுவதைக் காண்பது மனத்திற்கு அதிர்ச்சியையும் இன்பத்தையும் கொண்டு வரும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040