• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்சோவில் சுற்றுலா தலங்கள் எவை?
  2016-08-28 16:31:11  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்சோ, சீனாவின் சேஜியாங் மாநிலத் தலைநகராக விளங்குகிறது. நீண்டகால வரலாறுடைய ஹாங்சோ, சீனாவின் 7 பழைய தலைநகர்களில் ஒன்றாகும்.

பழங்காலத்தில், "வானில் சொர்க்கமும் தரையில் சூஹாங்கும்"என்ற பெருமை ஹாங்சோவுக்கு கிடைத்துள்ளது.(சூஹாங்: சூசோ மற்றும் ஹாங்சோ நகரங்கள், சூஹாங் என சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகின்றன)

நியூயார்க் டைம்ஸ் செய்தியிதழ் வெளியிட்ட 2011ஆம் ஆண்டுக்கு உலகில் சுற்றுலா செல்லத்தக்க 41 சிறந்த இடங்களின் பட்டியலில், ஹாங்சோ இடம்பெற்றிருந்தது.

ஹாங்சோ நகரிலுள்ள "ஷி ஹு" ஏரி, "ஜிங் ஹாங் டாவ் யுன் ஹெ" பழைய கால்வாய் ஆகிய சுற்றுலா தலங்கள் பயணிகள் சுற்றுலா செல்லத்தக்கவை. தவிரவும் ஹாங்சோ நகருக்கு அருகிலுள்ள "ச்சியன் தாவ் ஹு" எனும் ஏரி புகழ்பெற்றது. இந்த ஏரியில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் கூட்டாக அமைந்துள்ள அரிய காட்சியைக் கண்டுரசிக்கலாம்.

"ஷி ஹு" ஏரி

"ஜிங் ஹாங் டாவ் யுன் ஹெ" பழைய கால்வாய்

"ச்சியன் தாவ் ஹு"  எனும் ஏரி

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040