• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய ஒன்றியம்: TTIP தொடர்பான பேச்சுவார்த்தை சீராக முன்னேறி வருகிறது
  2016-08-30 14:27:31  cri எழுத்தின் அளவு:  A A A   

TTIP எனும் அட்லாண்திக் பெருங்கடல் கடந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூட்டாளியுறவு உடன்படிக்கை பற்றி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சீராக முன்னேறி வருகிறது. இவ்வாண்டின் இறுதிக்குள் பேச்சுவார்த்தையை முடிவுக்கு வருவதற்குரிய வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளர் மார்காரிதிஸ் ஸ்கினாஸ் 29ஆம் நாள் தெரிவித்தார்.

தற்போது, இப்பேச்சுவார்த்தை தீர்க்கமான காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது. பாதுகாப்பு, மக்களின் உடல் நலம், சமூகம் மற்றும் தரவுகள் மீது ஐரோப்பாவின் பாதுகாப்பு வரையறையையும், ஐரோப்பாவின் பண்பாட்டுப் பன்மை தன்மையையும் இவ்வுடன்படிக்கை பலி கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

TTIP தொடர்பான பேச்சுவார்த்தை மூன்று ஆண்டுகள் நீடித்துள்ளது 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தையை முடித்து கொள்வதை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நாடுகின்றன. ஆனால், பேச்சுவார்த்தை போக்கு மந்தமாக இருக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040