• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்று மிக்க நகர் யீபின்
  2016-09-01 09:27:04  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்று, ஸ்ச்சிவான் மாநிலத்தின் வரலாற்று மிக்க நகர் யீபின் பற்றி கூறுகிறேன். இந்நகர் ஸ்ச்சுவானின் தெற்கில் அமைந்துள்ளது. சீனாவின் யாங்சி ஆற்றின் மேல்பகுதியில் வளர்ந்து வரும் நகர் இதுவாகும். தென் பட்டுப் பாதையின் துவக்கமும் இதுவாகும்.

யீபின் நகரில் இரண்டு மிகவும் புகழ் பெற்ற காட்சித்தலங்கள் உள்ளன. முதலாவது, ஷுநான்ஸூஹை என்னும் காட்சித்தலமாகும். சீனாவில் அழகு மிக்க பத்து காடுகளில் இது ஒன்றாகும். இக்காட்சித்தலம் சுமார் 120 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடையது. இங்கு சுமார் 5000 ஹெக்டர் நிலப்பரப்புடைய மூங்கில் காடு செழிந்து வளர்ந்துள்ளது. மூங்கில் கடல் என இக்காட்சித்தலம் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. 500க்கும் அதிக மலைகள் பரந்துபட்ட மூங்கில் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஷுநான்ஸூஹை காட்சித்தலத்தைப் பார்வையிட, ஆண்டு முழுவதிலும் உகந்தது. வசந்த காலம், மூங்கில் தளிர்கள் முனைப்புடன் காணப்படும். பார்ப்பதற்கு உயிராற்றல் நிறைந்திருக்கும். கோடைக்காலம், காட்சித்தலம் முழுவதும் மூங்கில் மரங்களால் பச்சை பசேல் என அலங்கரிக்கப்படும். ஊற்று நீர் பாய்ந்தோடுவதையும் கண்டுரசிக்கலாம். கோடைக்காலமாக இருந்தாலும், அங்கு முகம் மலர, உடல் குளர இருக்கும். இலையுதிர் காலம், காற்றுடன் மூங்கில் இலைகள் அசைந்திடுக்கும். பச்சை பசேல் என இருக்கும் காட்டில் சிவப்பு இலைகளை அவ்வப்போது காண முடியும். குளிர்காலத்தில், பச்சையான கிளை, பனியால் போர்த்தி உள்ளது உங்களுக்கு மன அமைதியைக் கொண்டு வரும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040