• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் விண்வெளி ஆய்வுக்கலமான தியன்கோங்-2
  2016-09-12 15:21:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் விண்வெளி ஆய்வுக்கலமான தியன்கோங்-2 செப்டம்பர் 15 முதல் 20ம் நாளுக்குள் உரிய நேரத்தில், ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் மனிதர்களை ஏற்றிச்செல்லும் திட்டப்பணியின் முதலாவது விண்வெளி ஆய்வுக்கலம், இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தியன்கோங்-2 விண்கலனில், 14 பயன்பாட்டுப் பிரிவுகள், மருத்துவ ஆய்வுக் கருவி, பராமரிப்புக் கருவி ஆகியவை இடம்பெறுகின்றன. அவற்றின் மூலம், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுடப் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தியன்கோங்-2 விண்கலன் செலுத்தப்பட்ட பிறகு, விண்வெளிவீரர்களை ஏற்றிச்செல்லும் சென்சோ-11 விண்கலன் விண்ணில் செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டு விண்கலன்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, விண்வெளி வீரர்கள், தியன்கோங்-2 விண்கலனுக்கு சென்று, அறிவியல் ஆய்வு மேற்கொள்வார்கள். தியன்கோங்-2 விண்வெளி ஆய்வுக்கலம் பற்றி, இந்த ஆய்வுக்கலத்தின் தலைமை வடிவமைப்பாளர் சு சுங்பெங் கூறியதாவது

தியன்கோங்-2 விண்வெளி ஆய்வுக்கலத்தின் முதல் இலக்கு, இடைக்காலமாக தங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதாவது, விண்வெளிவீரர்கள், இதில் 30 நாட்களாக ஆய்வுப் பணி புரிந்து தங்கி வருவார்கள். இதன் 2ஆம் இலக்கு, அடுத்த ஆண்டில் போக்குவரத்து விண்கலனுடன் இணைக்கப்பட்டு, எரிபொருளை விநியோகிப்பதாகும். மூன்றாம் இலக்கு, சீனாவின் விண்வெளி நிலையத்தின் கட்டுமானத்திற்கு தொழில் நுட்ப சோதனை நடத்துவதாகும் என்றார்.

பன்னாட்டு விண்வெளி நிலையம் அமையும் கோள்பாதையின் சரசாரி உயரம், சுமார் 350 கிலோமீட்டர் ஆகும். சீனாவின் தியன்கோங்-2 ஆய்வுக்கலம், புவியில் இருந்து 393 கிலோமீட்டர் உயரத்தில் இயங்கும். இது, எதிர்காலத்தில் சீனாவின் விண்வெளி நிலையம் இயங்கும் சுற்றுப்பாதையின் உயரமாகும். எனவே, தியன்கோங்-2, விண்வெளி நிலையத்திற்கு தொழில் நுட்ப சோதனை நடத்தும் முக்கிய பொறுப்பினை ஏற்கும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040