• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யுன்னான் மாநிலத்தில் நிறுவப்படும் பௌத்த மத பரிமாற்ற மையம்
  2016-09-26 08:57:43  cri எழுத்தின் அளவு:  A A A   
2016 சோங் ஷேங் கருத்தரங்கு 25ஆம் நாள் நிறைவுற்றது. இக்கருத்தரங்கு பற்றி சீனத் தேசிய மத விவகார பணியகத்தின் தலைவர் வாங் சுவ்ஆன் குறிப்பிடுகையில், யுன்னான் மாநிலத்துக்கும் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் பௌத்த மத தொடர்பு நீண்ட வரலாறுடையது. இருதரப்பு மக்களுக்கிடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கு சோங் ஷேன் கருத்தரங்கு துணைபுரியும் என்று தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு டிசம்பர் திங்கள், யுன்னான் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பௌத்த மதத் துறை பரிமாற்ற மையம், குன்மிங் நகரிலுள்ள பௌ ஹுவா கோயிலில் நிறுவப்படும். இப்பிரதேசத்திலுள்ள பௌத்த மத துறவிகளுக்கிடையேயான பரிமாற்றத்தை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று இந்நிகழ்விலிருந்து கிடைத்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040