• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்திருத்தத்தில் சாதனைகள்
  2016-09-26 18:29:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்திருத்தப் போக்கில், தெளிவான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன என்று சீனாவிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதிநிதி ஷி ருய்தே 26ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீனப் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வழங்கிய புதிய கண்காணிப்பு அறிக்கையில், சீனாவின் புதிய ஐந்தாண்டு வரைவுத் திட்டங்களில், சரியான இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன. நாணயக் கொள்கை, நிதிக் கொள்கை, நகரமயமாக்கம் முதலான துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் அதேவேளையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமான உற்பத்தித் திறனைக் குறைப்பது, அரசு சார் தொழில் நிறுவனங்களை சீர்திருத்தம் செய்வது ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆழமான மனப்பதிவு ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

உலகளாவிய பார்வையில், உலகிற்கு சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனப் பொருளாதாரம் வளரும் வேகம் மந்தமாகியுள்ள போதிலும், சீனப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனப் பொருளாதாரம் தொடர்ந்து பெரிய பங்களிப்பு கொண்டுள்ளது என்று ஷி ருய் தே வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040