• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளரும் நாடுகளுக்கும் புதிய சந்தைகளுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் சீன நாயணம்
  2016-09-28 15:58:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன நாணயமான ரென்மின்பி, வரும் அக்டோபர் 1-ம் தேதி, சர்வதேச நாணய நிதியத்தின் எஸ்.டி.ஆர் எனும் சர்வதேச கையிருப்பு முறைமையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட உள்ளது. அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டன் பவுண்டு, ஜப்பான் யென் ஆகிய நான்கு நாணயங்களுடன் ரென்மின்பி அடங்கும் எஸ்.டி.ஆர் முறைமையில், ரென்மின்பி, 10.92 விழுக்காடு விகிதம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.டி.ஆர் முறைமையில் சேர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்க டாலர் மற்றும் யூரோவை அடுத்து, இம்முறைமையில் சீன ரென்மின்பியின் பங்கு 3-ஆவது இடம் வகிக்கிறது. வளரும் நாடுகளும் புதிய சந்தைகளைக் கொண்ட நாடுகளும் விரைவாக எழுந்து வரும் முன்னேற்றப் போக்கினை இந்த விகிதம் வெளிக்காட்டுகிறது. அது, இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவில் நன்மைகளை ஏற்படுத்தும். மேலும், எஸ்.டி.ஆர் முறைமையில் சேர்க்கப்பட்ட பிறகு, ரென்மின்பி மீது உலக சந்தைகளின் நம்பிக்கை அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040