• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எரியாற்றல் மாற்றுத்துக்கு வேண்டுகோள்
  2016-09-29 10:56:50  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச எரியாற்றல் மன்றத்தின் 15ஆவது கூட்டம் 28ஆம் நாள் அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் நிறைவுற்றது. எரியாற்றல் மாற்றத்தை விரைவுபடுத்தி, தொல்படிம எரிபொருட்கள் மற்றும் அணு ஆற்றல் எரிபொருட்களுக்குப் பதிலாக புதிய எரியாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தின் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய், இயற்கைவாயு, புதிய எரியாற்றல், எரியாற்றல் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான 4 இரகசிய கூட்டங்கள் இக்கருத்தரங்கின் போது நடைபெற்றன. பெரும் கவனத்தை ஈர்த்து வரும் சர்வதேச எண்ணெய் விலை பற்றிய விவாதமும் நடத்தப்பட்டது.

இம்மன்றத்தின் தலைமைச் செயலாளர் சுன் சியன்ஷெங் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச எரியாற்றல் சந்தையில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கையாளும் வகையில் தொடர்ந்து கலந்தாய்வை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040