• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் உரை
  2016-10-17 11:27:09  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 8ஆவது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 16ஆம் நாள் உரை நிகழ்த்தினார்.

"நம்பிக்கையை உறுதிப்படுத்தி கூட்டு வளர்ச்சியை நாடுவோம்" என்ற தலைப்பிலான இவ்வுரையில், கடந்த பத்து ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அடைந்த முன்னேற்றங்களை ஷி ச்சின்பீங் தொகுத்து உயர்வாக மதிப்பிட்டார். அவர் கூறியதாவது,

கடந்த 10 ஆண்டுகளில், பிரிக்ஸ் நாடுகள் கூட்டு வளர்ச்சிக்காகப் பாடுபட்டு முன்னேறி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை மேம்பாடு முதலிய துறைகளில் சிறந்த முன்னேற்றங்கள் அடைந்துள்ளன. பன்முக ஒத்துழைப்புக் கட்டமைப்பை உருவாக்கி அதிக சாதனைகளைப் பெற்றுள்ளோம். சர்வதேச நிதி நெருக்கடியை கூட்டாகச் சமாளித்துள்ளோம். முக்கிய சர்வதேச மற்றும் பிரேதச பிரச்சனைகள் தொடர்பாக ஒரே குரலில் பன்னாட்டுப் பொருளாதார மேலாண்மை துறையின் சீர்திருத்தத்தை செயலாக்க முறையில் விரைவுப்படுத்தியுள்ளோம். இதன் விளைவாக, புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும் கருத்து வெளிப்பாட்டுரிமையையும் பெரிதும் அதிகரித்துள்ளோம் என்று ஷி ச்சின்பீங் கூறினார்.

மந்தமான நிலையிலுள்ள உலக பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு அவர் 5 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

கட்டமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம், வெளிநாடுகளுக்குத் திறக்கும் பொருளாதார வளர்ச்சிமுறையை உருவாக்குதல், தெற்கு-வடக்கு மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுபடுத்துதல், இயற்கை சீற்றம், காலநிலை மாற்றம், தொற்று நோய் பரவல், பயங்கரவாதம் முதலிய உலகளாவிய பிரச்சனைகளைக் கூட்டாகச் சமாளித்தல், கூட்டு பயன் தரும் புதிய பன்னாட்டுறவை உருவாக்குதல், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி மற்றும் முன்னெச்சரிக்கை கையிருப்பு என்ற அமைப்புமுறையைச் சிறப்பாக இயக்குதல் ஆகியவை இந்த 5 முன்மொழிவுகளாகும்.

2017ஆம் ஆண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பதவியைச் சீனா வகிக்க உள்ளது. இக்கூட்டமைப்பின் 9ஆவது உச்சிமாநாடு ஜுலை திங்களில் சீனாவின் ஃபூச்சியேன் மாநிலத்தின் சியாமன் நகரில் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். வேளாண் துறை ஆய்வு, சுங்கத் துறை ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான ஒத்துழைப்பு ஆவணங்கள் இவ்வுச்சி மாநாட்டுக்குப் பின் கையொப்பமிடப்பட்டுள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 8ஆவது உச்சி மாநாடு தொடர்பான கோவா அறிக்கையும் வெளியிடப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040