• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய மாணவர்களின் தாலிப் பயணம்
  2016-10-20 09:27:44  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே, சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று, உங்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி தருகிறேன். சீனாவில் படிக்கும் இந்திய நண்பர்களுடன், தாலி நகரில் பயணம் மேற்கொள்கிறோம். நீங்கள் தயாரா?

தாலி நகர், சீன யுன்னான் மாநிலத்தில் அமைந்துள்ளது. நீண்ட வரலாறுடைய தாலி நகர், அதன் அழகு மிக்க இயற்கைக் காட்சியால் சீனாவில் மட்டுமல்ல, உலகளவிலும் புகழ் பெற்றுள்ளது. அஷ்வானி, வினோத், பாலோவி மற்றும் ஆதி ஆகிய நான்கு பேரும் இந்நகரால் கவர்க்கப்பட்டு இங்கு படிக்க வந்துள்ளனர்.

இப்போது, அவர்கள் தாலி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். தாலி நகர் பற்றி, அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு நினைவுகளைக் கொண்டுள்ளனர். ஆதி கூறுகையில்

தாலி ஒரு அழகு மிக்க நகர். நான் இங்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. முதன்முறையாக வந்த போது, தாலியில் பனி பொழிந்து கொண்டிருந்தது. அதற்குப் பின்பு, இங்குள்ள தட்பவெப்பம் மேன்மெலும் வெயிலாக மாறியது. ஆனால், இங்குள்ள காட்சிகள் எப்போதுமே அழகாக உள்ளன. இங்குள்ள வானிலை இந்தியாவைப் போல உள்ளது என்றார்.

அஷ்வானியும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது

இவ்வாண்டு நான் இங்கு வந்த நான்காவது ஆண்டாகும். தாலி பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாகுமென கருதுகிறேன். இங்குள்ள கல்விக் கட்டணம் நியாயமான முறையில் உள்ளது. இங்கு சீனா மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களும் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு பெரும் உதவியை அளித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் கருவிகளும் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்டவை. அது எங்களுக்கு வசதியாக உள்ளது என்று அஷ்வானி தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040