• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நாவின் மீது சீனாவின் எதிர்பார்ப்பு
  2016-10-20 14:14:16  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா. தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கும் அன்டோனியொ குடெரேஸுக்கும் உறுப்பு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை 19ஆம் நாள் நடைபெற்றது. உறுப்பு நாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கவனத்தையும் ஐ.நா. மீதான அவற்றின் எதிர்பார்ப்புகளையும் அவர் கேட்டறிந்தார்.

ஐ.நாவிலுள்ள சீன நிரந்தர பிரதிநிதி லியூ ஜியேயீ இக்கூட்டத்தில் பேசுகையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது, உலகளாவிய சவால்களை ஒத்துழைப்பு மூலம் கையாள்வது உள்ளிட்ட துறைகளில் ஐ.நா. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040