• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர்-அமெரிக்க முன்னாள் நிதித்துறை அமைச்சர் சந்திப்பு
  2016-10-22 14:49:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 20ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் முன்னாள் நிதித் துறை அமைச்சர் ஹென்றி பால்சன்னைச் சந்தித்துரையாடினார்.

சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதில் பால்சன் நிதியம் செய்துள்ள பணிகளை லீ கெச்சியாங் வெகுவாகப் பாராட்டினார்.

சீன-அமெரிக்க இரு தரப்பு முதலீட்டு உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையில் சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இரு தரப்பும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, இப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற வேண்டும் என சீனா விரும்புவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.

கடந்த திங்கள் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் நியூயார்க்கில் ஐ.நாவின் உயர் நிலைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போது, அமெரிக்காவின் பல்வேறு துறையினருடனான தொடர்பில் ஆக்கப்பூர்வமான பயன்கள் பெறப்பட்டுள்ளன. அமெரிக்க-சீன உறவின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு இது துணை புரியும் என்று ஹென்றி பால்சன் தெரிவித்தார். பால்சன் நிதியம், சீனாவுடன் இணைந்து தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்ற முயற்சி மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040