சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 6ஆவது முழு அமர்வின் துவக்கம்
2016-10-24 09:27:29 cri எழுத்தின் அளவு: A A A
சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 6ஆவது முழு அமர்வு அக்டோபர் 24 முதல் 27ஆம் நாள் வரை, பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. கட்சி ஒழுங்குமுறையைக் கண்டிப்பான முறையில் பன்முகங்களிலும் வலுப்படுத்துவதை இந்த முழு அமர்வு ஆராயும். தற்போதைய சூழலில் கட்சிக்குள்ளான அரசியல் நடைமுறை விதிகளை வகுத்து, "சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கண்காணிப்பு விதிகளை" திருத்தும். கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கட்சி ஒழுங்குமுறையை கண்டிப்பான முறையில் பன்முகங்களிலும் வலுப்படுத்தும் மனவுறுதியை இது காட்டுகிறது. 6ஆவது முழு அமர்வு, வெளிநாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் நிபுணர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இச்செயலை அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்நடவடிக்கை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய உயிராற்றலை ஊட்டும் என்று அவர்கள் கருதியுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய