• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் லாபம்
  2016-10-27 15:50:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் திங்கள் வரை, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபத் தொகை, 4 லட்சத்து 63 ஆயிரத்து 806 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் செப்டம்பர் திங்கள் இத்தொழில் நிறுவனங்களின் மொத்த லாபத் தொகை, 57 ஆயிரத்து 713 கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு விகிதம், இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்களில் இருந்ததை விட 11.8 விழுக்காடு குறைவாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040