• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போத்தலா மாளிகை
  2016-10-28 14:55:05  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே, வணக்கம், சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள காட்சித்தலங்கள் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இன்று, திபெத்தின் லாசா நகரின் அழகை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். லாசா நகர் திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் மதத்தின் மையமாகும். திபெத் மரபுவழி புத்தமதத்தின் புனித இடமுமாகும்.

இந்நகர் திபெத் பீடபூமியிலுள்ள மையப் பகுதியிலும் இமாலய மலையின் வடக்கிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3650 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதனால், உயிர்வாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

லாசா நகரில் ஆண்டுமுழுவதிலும் நீலவண்ண வானமும் வெண் மேகங்களும் காணப்படும். குளிர்காலத்தில் கடும் குளிரும் கோடைகாலத்தில் கடும் வெயிலும் நிலவாது. அங்கு பயணம் மேற்கொள்ள ஆண்டு முழுவதும் உகந்தது. தொடர்ந்து வரும் சூரிய கதிர்களால், லாசா, சூரிய கதிர் நகர் என வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

அதன் அழகு மிக்க இயற்கைக் காட்சி, நீண்டகால வரலாறு, தனிச்சிறப்பு மிக்க பழக்கவழக்கம் மற்றும் மதப் பண்பாட்டால், லாசா நகர் சீனாவில் மட்டுமல்ல, உலகளவிலும் புகழ் பெற்றுள்ளது. ஆண்டுமுழுவதில், உலகிலிருந்து பல்வேறு நாட்டுப் பயணிகள் லாசாவுக்கு வந்து வருகின்றனர்.

லாசா என்பது சிறப்புப் பொருளைத் தருகிறது. அதன் பொருள், புத்தரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும். பௌத்த மதக் கோயிலால் இந்நகர் நிறுவப்பட்டது.

அங்கு பயணம் மேற்கொண்டால், போத்தலா மாளிகையைக் கட்டாயம் பார்வையிட வேண்டும். இந்த மாளிகை 7ஆம் நூற்றாண்டில் கட்டியமைக்கப்பட்டது. லாசா நகரின் மையத்தில் அமைந்துள்ள மலையில் அது கம்பீரமாக நிற்கிறது. கடல் மட்டத்திலிருந்து அது சுமார் 3700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகில் மிக உயர்ந்த கடல் மட்டத்தில் கட்டியமைக்கப்பட்ட பழைய மாளிகை அதுவாகும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040