• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் புனித ஏரி நமுசுவோ
  2016-11-09 10:32:23  cri எழுத்தின் அளவு:  A A A   

நமுசுவோ ஏரி திபெத்தின் மையப் பகுதியில் உள்ளது. திபெத்தின் இரண்டாவது பெரிய ஏரி அதுவாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் நிலப்பரப்பளவு சுமார் 2000 சதுர கிலோமீட்டராகும்.

 நமுசுவோ என்ற சொல், திபெத் மொழியில் வான ஏரி என்ற பொருளைத் தருகிறது. வரலாற்றுப் பதிவின்படி, இந்த ஏரி நீலவண்ணமுடைய வானம் தரையில் இறங்கியதைப் போல தோற்றம் கொண்டிருக்கும். அதனாலேயே இந்த ஏரிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி பௌத்த மதத்துக்கான புனித இடங்களில் ஒன்றாகும்.

நமுசுவோ ஏரியின் தெற்குப் பக்கத்தில் நைன்சென்நங்ஹா மலை அமைந்துள்ளது. புனிதமான இந்த ஏரி பற்றி புராணக்கதைகள் பல பரவலாகியுள்ளன. பௌத்த மதத்திலும், உள்ளூர் மக்களின் நாட்டுப்புற பாடலிலும், நமுசுவோ ஏரி மற்றும் நைன்சென்நங்ஹா மலை, ஒருபோதும் பிரிக்கப்படாத தம்பதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்பர பிரதிபலிப்பில் அவை மென்மேலும் அழகாக காணப்பட்டுள்ளன.

பரந்துபட்ட புல்வெளிகள் நமுசுவோ சுற்றி காணப்பட்டுள்ளன. இவை இயற்கையான பண்ணையாகும். ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலம் வரும் முன்பு, வட திபெத்திலுள்ள மேய்ப்பர்ரகள் ஆடு, மாடுகளுடன் இங்கு வந்து குளிர்காலத்தைக் கழிப்பர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040